மாதிரி வாக்குப்பதிவை கலெக்டர் ஆய்வு
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணியானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
அரியலூர்,
2019-ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணியானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,470 வாக்குப்பதிவு எந்திரங்களையும், 800 கட்டுப்பாட்டு எந்திரங்களையும், 800 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரங்களையும் சரிபார்க்கும் பணியினை, பெங்களூரு, பாரத மின்னணு லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த, 12 பொறியாளர்கள் மேற்கொண்டனர். இப்பணியின் நிறைவு நாளான நேற்று, சரிபார்க்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, 5 சதவீத எந்திரங்களை கொண்டு, அவர்களின் முன்னிலையில், மாதிரி வாக்குப்பதிவு செய்து காண்பிக்கப்பட்டது. இம்மாதிரி வாக்குப்பதிவை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அரியலூர், வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தனி வட்டாட்சியர் (தேர்தல்), சந்திரசேகரன் மற்றும் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் வட்டாட்சியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story