மாவட்ட செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் மர்ம சாவு கொலையா? போலீஸ் விசாரணை + "||" + The murder of a police sub-inspector Police investigation

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் மர்ம சாவு கொலையா? போலீஸ் விசாரணை

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் மர்ம சாவு கொலையா? போலீஸ் விசாரணை
பரமத்தியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கோடங்கிபட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் பிரபு (வயது 35). இவர் தனியார் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கிருத்திகா (35). இவர் கரூர் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.


நேற்று மாலை பரமத்தி கோட்டையண்ணன் சாமி கோவில் அருகே உள்ள ஒரு முட்புதரில் பிரபு கழுத்தில் துண்டால் இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பரமத்தி போலீசார், பிரபு கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர்.

இறந்து கிடந்த பிரபுவின் கையில் மோதிரமும், கழுத்தில் தங்கச்சங்கிலியும் இருந்தது. மேலும் சிறிது தூரத்தில் அவரது மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் நகை, பணத்துக்காக அவரை யாரேனும் கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை என்றே போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பிரேபரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பர்னிச்சர் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
அழகியபாண்டியபுரம் அருகே பர்னிச்சர் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
2. பள்ளிக்கூட கதவை உடைத்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்களை திருடிய மாணவர்கள்; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
தேவகோட்டையில் பள்ளிக்கூட கதவை உடைத்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் திருடப்பட்டது தொடர்பாக 7 மாணவர்கள் பிடிபட்டனர். இந்த சம்பவத்தை அரங்கேற்றியது எப்படி? என்பது குறித்து அந்த 7 பேரும் போலீசாரிடம் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
3. அரசு மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
திருவாரூரில், அரசு மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. கிணற்றின் குறுக்கே இருந்த கம்பத்தில் பிணமாக தொங்கிய தொழிலாளி போலீசார் விசாரணை
ஒரத்தநாடு அருகே கிணற்றின் குறுக்கே இருந்த கம்பத்தில் தொழிலாளி ஒருவர் பிணமாக தொங்கினார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
புதுவையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.