தூத்துக்குடிக்கு இன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை : பொதுமக்களிடம் மனுக்கள் வாங்குகிறார்
தூத்துக்குடிக்கு இன்று(வெள்ளிக்கிழமை) கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், அரசு சுற்றுலா மாளிகையில் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்குகிறார்.
தூத்துக்குடி,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணி அளவில் நெல்லையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகைக்கு வருகிறார். காலை 10 மணிக்கு தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 10-30 மணிக்கு தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
பின்னர் அரசு சுற்றுலா மாளிகையில் அதிகாரிகளுடன் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மதியம் 1-30 மணி முதல் 3-30 மணி வரை பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறார்.
மாலையில் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இன்று கவர்னர் வருகையையொட்டி தூத்துக்குடி மாநகரின் பல இடங்களில் வேகத்தடைகள் அகற்றப்பட்டன. ரோடுகள் சுத்தம் செய்யப்பட்டு, ஆங்காங்கே ரோடுகளில் இருந்த குழிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. மாநகரின் முக்கிய இடங்களில் சுத்தம் செய்யப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story