குற்றாலம், புளியங்குடி வனப்பகுதியில் 168 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன


குற்றாலம், புளியங்குடி வனப்பகுதியில் 168 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன
x
தினத்தந்தி 12 Oct 2018 3:30 AM IST (Updated: 12 Oct 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம், புளியங்குடி வனப்பகுதியில் 168 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

புளியங்குடி, 

நெல்லை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் தினகர்குமார் மற்றும் முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன் ஆகியோர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் திருமால் தலைமையில் புளியங்குடி தலையணையில் வனத்துறை ஊழியர்களுக்கு புலிகள் கணக்கெடுப்பதற்கான தானியங்கி கேமராக்கள் பொருத்துவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. வனச்சரக அலுவலர்கள் அயூப்கான் (புளியங்குடி), ஸ்டாலின் (சிவகிரி), ஆரோக்கியசாமி (குற்றாலம்) உள்பட 65 பேர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து புளியங்குடி வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ள 3 பீட்டுகளில் 21 வழித்தடங்களில் 42 கேமராக்களும், சிவகிரி வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ள 5 பீட்டுகளில் 32 வழித்தடங்களில் 64 கேமராக்களும், குற்றாலம் வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ள 7 பீட்டுகளில் 31 வழித்தடங்களில் 62 கேமராக்களும் ஆக மொத்தம் 168 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கேமராக்கள் புலிகள் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கும், பிற வனவிலங்குகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கும், வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பீட் பகுதிக்கும் 5 நபர்கள் கொண்ட சிறப்பு குழுவினர் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 

Next Story