மாவட்ட செய்திகள்

சேலம்-தர்மபுரி மண்டலத்திற்கு 30 புதிய அரசு பஸ்கள் இயக்கம் கலெக்டர் தொடங்கி வைத்தார் + "||" + For Salem Dharmapuri Zone 30 New Government Buses Operation Collector started

சேலம்-தர்மபுரி மண்டலத்திற்கு 30 புதிய அரசு பஸ்கள் இயக்கம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

சேலம்-தர்மபுரி மண்டலத்திற்கு 30 புதிய அரசு பஸ்கள் இயக்கம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
சேலம், தர்மபுரி மண்டலத்திற்கு 30 புதிய அரசு பஸ்களை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.
சேலம்,

சேலம், தர்மபுரி மண்டலத்திற்கான புதிய அரசு பஸ்கள் இயக்கத்திற்கான விழா சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், சக்திவேல், மனோன்மணி, சின்னதம்பி, மருதமுத்து சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சேலம் மண்டலத்திற்கான 13 புதிய அரசு பஸ்கள், தர்மபுரி மண்டலத்திற்கான 17 புதிய அரசு பஸ்கள் என மொத்தம் 30 புதிய அரசு பஸ்களை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் மேலாண் இயக்குனர் அரவிந்த், துணை இயக்குனர்கள் ஜெயக்குமார் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:- புதிய அரசு பஸ்கள் சேலத்தில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை வரையிலும், செந்தாரப்பட்டியில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை வரையிலும், எடப்பாடியில் இருந்து ஜலகண்டாபுரம் வழியாக பெங்களூரு வரையிலும், எடப்பாடியில் இருந்து கும்பகோணம் வரையிலும், சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக கோவை வரையிலும், கடத்தூரில் இருந்து திருப்பூர் வரையிலும், கோவையில் இருந்து திருவண்ணாமலை வரையிலும், சேலத்தில் இருந்து திருப்பூர் வரையிலும், நங்கவள்ளியில் இருந்து கோவை வரையிலும், சேலத்தில் இருந்து கரூர் வரையிலும், திருச்செங்கோட்டில் இருந்து சேலம் வழியாக பெங்களூரு வரையிலும் உள்ள வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
2. சேலம், கோவை உள்பட நாடு முழுவதும் 129 மாவட்டங்களில், குழாய் மூலம் சமையல் கியாஸ் வினியோகம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
சேலம், கோவை உள்பட நாடு முழுவதும் 129 மாவட்டங்களில், குழாய் மூலம் சமையல் கியாஸ் வினியோகம் செய்யும் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
3. சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் - 900 பேர் பங்கேற்பு
சேலத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் 900 பேர் கலந்து கொண்டனர்.
4. சேலம், கோவை நகர கியாஸ் வினியோக திட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி 22-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம், சேலம் மற்றும் கோவை நகர கியாஸ் வினியோக திட்டத்திற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கி உள்ளது.
5. சேலத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் - 182 பேர் கைது
சேலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்திய மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 182 பேரை போலீசார் கைது செய்தனர்.