மாவட்ட செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு : வல்லக்கடவு பாதையை சீரமைக்க வலியுறுத்தல் + "||" + Survey Monitoring Committee on Mullaiperiyar Dam Explanation: Reinforcement of Vallakaduwa road

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு : வல்லக்கடவு பாதையை சீரமைக்க வலியுறுத்தல்

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு : வல்லக்கடவு பாதையை சீரமைக்க வலியுறுத்தல்
முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அணைக்கு செல்லும் வல்லக்கடவு பாதையை சீரமைக்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.
தேனி,


தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்ட உயர்வை கண்காணித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளுக்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. துணை கண்காணிப்பு குழுவினர் அணையில் அவ்வப்போது ஆய்வு செய்து, அணை நிலவரம் குறித்து மூவர் கண்காணிப்பு குழுவுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் மூவர் கண்காணிப்பு குழு தலைவரின் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் நேற்று ஆய்வு நடத்தினர். துணை கண்காணிப்பு குழுவின் தலைவரான மத்திய நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையில் ஆய்வு நடந்தது.

ஆய்வுக்காக தமிழக பிரதிநிதிகளான அணையின் செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி கோட்ட பொறியாளர் சாம்இர்வின், கேரள பிரதிநிதிகளான கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் கிரிஜாபாய், உதவி பொறியாளர் பிரசித் ஆகியோர் துணை கண்காணிப்பு குழு தலைவருடன் இணைந்து தேக்கடியில் இருந்து படகு மூலம் காலை 10 மணியளவில் அணைக்கு புறப்பட்டு சென்றனர். வழக்கமாக கேரள பிரதிநிதிகள் வல்லக்கடவு வழியாக ஜீப்பில் தான் செல்வார்கள். அந்த பாதை சேதம் அடைந்து உள்ளதால் இந்த முறை தமிழக அதிகாரிகளுடன் இணைந்து ஒரே படகில் பயணம் செய்தனர்.

இந்த குழுவினர் அணையில் காலை 11 மணியளவில் ஆய்வை தொடங்கினர். முல்லைப்பெரியாறு அணை, பேபி அணை, மதகு பகுதிகள், சுரங்கப் பகுதிகள் ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். 13 மதகுகள் அணையில் உள்ளன. இதில் 1 மற்றும் 3-வது மதகுகளை இயக்கி பார்த்தனர். பின்னர் 5-வது மதகையும் இயக்கி அது சரியாக இயங்குகிறதா? என்று ஆய்வு செய்தனர்.

அணையின் சுரங்க பகுதிக்கு சென்று கசிவுநீர் அளவை சேகரித்தனர். அது இயல்பான நிலையில் இருந்தது. பின்னர் அவர்கள் ஆய்வை முடித்துக்கொண்டு பிற்பகல் 2 மணியளவில் குமுளிக்கு திரும்பி வந்தனர்.

இதைத்தொடர்ந்து குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தினர். பின்னர் துணை கண்காணிப்பு குழுவினர் கூறியதாவது:-

முல்லைப்பெரியாறு அணைக்கு வல்லக்கடவு வழியாக செல்லும் பாதையில் உள்ள பாலம் கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த பலத்த மழையால் சேதம் அடைந்தது. இதனால், அணைக்கு அந்த வழியாக செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அணை மராமத்துப் பணிக்காக தளவாடப் பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலைமை உள்ளதால், பாலத்தை சீரமைத்து சாலை அமைக்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த சாலையை சீரமைப்பது குறித்து மூவர் குழுவுக்கு அறிக்கை அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வின்போது நீர்மட்டம் 133.65 அடி அளவில் இருந்தது. இதில் கசிவு நீர் இயல்பான அளவில் தான் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


தொடர்புடைய செய்திகள்

1. முல்லைப்பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட திட்டம்: கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
முல்லைப்பெரியாறு அணை அருகில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால், தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
2. முல்லை பெரியாறு அணை விவகாரம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம்
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
3. முல்லைபெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வு நடத்த அனுமதி : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு?
முல்லைபெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறு ஆய்வு நடத்த நிபந்தனைகளுடன் கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
4. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்கக் கோரும் கேரளாவின் கோரிக்கை நிராகரிப்பு
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்கக் கோரும் கேரளாவின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக துணைக்குழு முடிவு செய்ய உத்தரவிட்டது.
5. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.