நாகை அருகே: மணல் கடத்திய லாரி, டிராக்டர் பறிமுதல்- டிரைவர்கள் 2 பேர் கைது
நாகை அருகே மணல் கடத்திய லாரி, டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர்கள் 2 பேரை செய்தனர்.
நாகூர்,
நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நாகூர் வெட்டாற்று பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரி, டிராக்டரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் உரிய அனுமதியின்றி வெட்டாற்றில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரி மற்றும் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி மற்றும் டிராக்டர் டிரைவர்கள் வேதாரண்யம் மறைஞாயநல்லூர் அண்டர் தெருவை சேர்ந்த நடராஜன் (வயது 46), நாகை தெற்கு பால்பண்ணைச்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் அஜய் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story