மாவட்ட செய்திகள்

ராஜீவ் கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு ஐகோர்ட்டில் மனு + "||" + Rajiv murder case accused Ravichandran pleaded by the court

ராஜீவ் கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு ஐகோர்ட்டில் மனு

ராஜீவ் கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு ஐகோர்ட்டில் மனு
ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது–

எனது மகன் ரவிச்சந்திரன், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 27 வருடங்களாக சிறையில் இருந்து சிரமப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தமிழக அரசு விடுதலை செய்யலாம் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அந்த விவகாரத்தில் தமிழக கவர்னர் முடிவு எடுக்கும் வரை அல்லது என் மகனை அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யும் வரை அவருக்கு நீண்ட நாள் பரோல் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து தமிழக சிறைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டும், வழக்கு விசாரணையை வருகிற 25–ந்தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்
புதுவையில் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க பயங்கர ஆயுதங்களுடன் வாலிபரை பட்டப்பகலில் ஒரு கும்பல் துரத்தியது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. குமரி மாவட்டத்தில் கடலோர கிராம மக்களின் வாக்குரிமையை பெற்று தரவேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
குமரி மாவட்டத்தில் கடலோர கிராம மக்களின் வாக்குரிமையை பெற்று தர நடவடிக்கை எடுக்க கோரி தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
3. தாராபுரம் பனங்காட்டு வலசு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
தாராபுரம் பனங்காட்டு வலசு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
4. ஈரோட்டில் பயங்கரம் தந்தை அடித்து கொலை; மகன் கைது
ஈரோட்டில் தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
5. மருதை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரி 21 கோவில்களில் கிராம மக்கள் மனு
மருதை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரி 21 கோவில்களில் கிராம மக்கள் மனு அளித்தனர்.