மாவட்ட செய்திகள்

முதல்–அமைச்சர் மீது ஊழல் புகார்: சி.பி.ஐ. விசாரணை வரவேற்கத்தக்கது - வைகோ பேட்டி + "||" + Complaint against chief-minister: The CBI inquiry is welcome

முதல்–அமைச்சர் மீது ஊழல் புகார்: சி.பி.ஐ. விசாரணை வரவேற்கத்தக்கது - வைகோ பேட்டி

முதல்–அமைச்சர் மீது ஊழல் புகார்: சி.பி.ஐ. விசாரணை வரவேற்கத்தக்கது  - வைகோ பேட்டி
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என ஐகோர்ட்டு கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு நல்ல நம்பிக்கையை தந்துள்ளது.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தாலும், அதிகார வர்க்கத்தினர் தவணை முறையில் வாக்காளர்களுக்கு பொருட்கள் கொடுத்து கொண்டுதான் இருக்கின்றனர். இதனால் மக்கள் அதிருப்தி மற்றும் வெறுப்பில் உள்ளனர். எவ்வளவு பணம் செலவழித்தாலும் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. புதுவையில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் - நாராயணசாமி பேச்சு
புதுவையில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
2. பொள்ளாச்சியில் ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்
பொள்ளாச்சியில் ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டு உள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் துணை சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.
3. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் மர்ம சாவு கொலையா? போலீஸ் விசாரணை
பரமத்தியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. மாவோயிஸ்டு தலைவர் கைது எதிரொலி: மலைக்கிராமத்தில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை
தமிழக–கேரள எல்லையில் மாவோயிஸ்டு தலைவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பில்லூர் அணைப்பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் ம.தி.மு.க.வினர் சாலை மறியல்
வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் ம.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.