மாவட்ட செய்திகள்

திருவாரூரில்: வாலிபர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் - 2 பேர் கைது + "||" + In Thiruvarur: Attack by a steel bar on a young man - 2 arrested

திருவாரூரில்: வாலிபர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் - 2 பேர் கைது

திருவாரூரில்: வாலிபர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் - 2 பேர் கைது
திருவாரூரில் முன்விரோதம் காரணமாக வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர், 

திருவாரூர் கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் விஜி என்கிற விஜயகாந்த் (வயது 32). இவர் நேற்று முன்தினம் வண்டிகாரத் தெருவில் டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செம்புராயன் மகன் சிவக்குமார் (31), மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயகுமார் (34) ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக விஜயகாந்திடம் தகராறு செய்து அவரை இரும்பு கம்பி, அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் காயமடைந்த விஜயகாந்த் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விஜயகாந்த் திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், விஜய குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி
ஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலியாயினர்.
2. நாகர்கோவிலில் செல்போன் வாங்குவது போல் நடித்து, திருடிய வாலிபர் கைது
நாகர்கோவிலில் செல்போன் வாங்குவது போல் நடித்து, 2 செல்போன்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3. நன்னிலம் அருகே கோவிலில் திருட்டுப்போன மேலும் ஒரு சாமி சிலை மீட்பு வாலிபர் கைது
நன்னிலம் அருகே கோவிலில் திருட்டுப்போன மேலும் ஒரு சாமி சிலை மீட்கப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. குளச்சலில் மாயமான வாலிபர் கடலில் பிணமாக மீட்பு போலீஸ் விசாரணை
குளச்சலில் மாயமான வாலிபர் கடலில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. தந்தை-மகனை தாக்கிய வாலிபர் கைது
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ரெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தவசாமி (வயது 49).

அதிகம் வாசிக்கப்பட்டவை