மேற்கூரை உடைந்து விழுந்து ரெயில்வே ஊழியர் பலி


மேற்கூரை உடைந்து விழுந்து ரெயில்வே ஊழியர் பலி
x
தினத்தந்தி 13 Oct 2018 3:15 AM IST (Updated: 13 Oct 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே மேற்கூரை உடைந்து விழுந்து ரெயில்வே ஊழியர் பலியானார்.

சிவகங்கை,

காரைக்குடியை சேர்ந்தவர் பாண்டி (வயது 45). ரெயில்வே ஊழியரான இவர் காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து சிவகங்கை ரெயில் நிலையம் வரை உள்ள தண்டவாள பாதைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் பாண்டி சிவகங்கை ரெயில் நிலையத்தின் உள்ளே தண்டவாள பகுதியின் அருகில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை மீது ஏறி மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.

 அப்போது திடீரென மேற்கூரை உடைந்து விழுந்ததில், அதன் மீது நின்றிருந்த பாண்டி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மானாமதுரை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story