மாவட்ட செய்திகள்

மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - விக்கிரமராஜா பேட்டி + "||" + Recyclable plastic materials should be allowed

மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - விக்கிரமராஜா பேட்டி

மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - விக்கிரமராஜா பேட்டி
மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று ஈரோட்டில் விக்கிரமராஜா கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் பி.கந்தசாமி தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம், துணைத்தலைவர் ஜெப்ரீ, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச்செயலாளர் சிவநேசன், மாவட்ட செயலாளர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வருகிற 23–ந்தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. சில்லரை வணிகத்தை நசுக்கிவிட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு கால்பதித்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து வணிகர்களை ஒருங்கிணைத்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

வருகிற ஜனவரி மாதம் 1–ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களை உபயோக படுத்தக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு கட்டாயம் தடை விதிக்க வேண்டும். அதற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். ஆனால் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

மத்திய அரசு 2022–ம் ஆண்டோடு இந்தியா முழுவதும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்று அறிவித்து உள்ளது. அதுவரை எந்த நிர்பந்தமும் இல்லாமல் சாமானிய வியாபாரிகளும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

தமிழகத்தின் பிளாஸ்டிக் தேவை ஒரு மாதத்துக்கு 6 லட்சம் டன்னாக உள்ளது. ஆனால் அதற்கு மாற்றுவழி என்ன என்பது குறித்து அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. எனவே பிளாஸ்டிக் தடையை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பல்வேறு தரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.