மாவட்ட செய்திகள்

கீரமங்கலம் வழியாக பட்டுக்கோட்டை-காரைக்குடி 4 வழிச்சாலை அமைக்க பாலங்கள் கணக்கெடுப்பு + "||" + Through the keramangalam Pattukkottai Set up the Karaikudi 4 roadway Bridges survey

கீரமங்கலம் வழியாக பட்டுக்கோட்டை-காரைக்குடி 4 வழிச்சாலை அமைக்க பாலங்கள் கணக்கெடுப்பு

கீரமங்கலம் வழியாக பட்டுக்கோட்டை-காரைக்குடி 4 வழிச்சாலை அமைக்க பாலங்கள் கணக்கெடுப்பு
பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி வரை கீரமங்கலம் வழியாக 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ள நிலையில் தற்போதைய சாலையில் உள்ள சிறிய பெரிய பாலங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வழியாக தஞ்சாவூர் - சாயல்குடி சாலை தமிழ்நாடு நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலையை விரிவாக்கம் செய்து 4 வழி தேசிய நெடுஞ்சாலையாக அமைக்க அதற்கான பணிகள் நடந்து வருகிறது. முதல்கட்டமாக பட்டுக்கோட்டை- காரைக் குடி வரை சாலை அமைக்க திட்டமிடல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


இப்பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட உள்ளதால், பல மாதங்களாக இந்த வழித்தடத்தில் உள்ள சாலையில் மராமத்து பணிகள் குறைக்கப்பட்டுள் ளது. அதாவது சிறு சிறு பணிகள் மட்டும் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சாலையில் உள்ள வேகத்தடைகள் கணக்கெடுக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த வாரம் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் சிறிய பாலங்கள் அமைய உள்ள இடங்களை கண்டறிந்து அடையாளத்திற்கு மஞ்சள் நிற கல் நட்டு சென்றுள்ள னர். அதன் பிறகு தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பணியாளர்களுடன் இணைந்து கீரமங்கலம் அம்புலி ஆற்றுப்பாலம், பனங்குளம் வில்லுன்னி ஆற்றுப் பாலம் மற்றும் அந்த சாலையில் உள்ள பெரிய பாலங்களை அளவீடு செய்துள்ளனர். இதே போல இந்த சாலையில் உள்ள அனைத்து பெரிய, சிறிய பாலங்கள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் சில மாதங்களில் நிலம் கையகப் படுத்தும் பணியும், தொடர்ந்து சாலை பணியும் தொடங்கப்படும்.


தொடர்புடைய செய்திகள்

1. பட்டுக்கோட்டையில்: 9 நாட்களாக மின்சாரம் இல்லாததால் இருளில் மூழ்கிய 200 கிராமங்கள் - கொட்டும் மழையால் நிவாரண பணிகள் பாதிப்பு
கஜா புயல் காரணமாக பட்டுக்கோட்டையில் 9 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன.
2. ‘நண்பன்’ பட பாணியில் மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய இளைஞர்கள் - பொதுமக்கள் பாராட்டு
பட்டுக்கோட்டை அருகே ‘நண்பன்’ பட பாணியில் மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய இளைஞர்கள் இருவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
3. கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து பட்டுக்கோட்டையில் விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.