மாவட்ட செய்திகள்

மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் + "||" + Electric train Transfer of traffic

மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, 

சென்னை-அரக்கோணம், சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதையொட்டி சென்னை- அரக்கோணம் இடையே இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு 1 மணி முதல் 14-ந்தேதி அதிகாலை 5.05 மணி வரையிலும், சென்னை- கூடூர் இடையே 14-ந்தேதி இரவு 9.05 மணி முதல் 15-ந்தேதி நள்ளிரவு 2.30 மணி வரையிலும் ரெயில் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அரக்கோணம்-மூர்மார்க்கெட் இன்று இரவு 9.45 மணி, 14-ந்தேதி அதிகாலை 3.45 மணி, கடற்கரை-அரக்கோணம் இன்று நள்ளிரவு 1.20 மணி, 14-ந்தேதி அதிகாலை 4.20 மணி, 14-ந்தேதி மூர்மார்க்கெட்-திருத்தணி அதிகாலை 4 மணி, அரக்கோணம்-கடற்கரை அதிகாலை 4 மணி, சூலூர்ப்பேட்டை-கும்மிடிப்பூண்டி இரவு 11 மணி மின்சார ரெயில்களும், 15-ந்தேதி மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இரவு 12.15 மணி, கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் நள்ளிரவு 2.45 மணி மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

பகுதி நேர ரத்து

14-ந்தேதி திருத்தணி-மூர்மார்க்கெட் காலை 6.30 மணி ரெயில் அரக்கோணத்தில் இருந்து புறப்படும். மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை இரவு 8.35 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும். ஆவடி- கடற்கரை காலை 6.10 மணி ரெயில் கடற்கரைக்கு பதில் மூர்மார்க்கெட் செல்லும்.

இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.