மக்கள் தொடர்பு திட்ட முகாம்


மக்கள் தொடர்பு திட்ட முகாம்
x
தினத்தந்தி 14 Oct 2018 4:00 AM IST (Updated: 13 Oct 2018 10:39 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதுாரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார்.

திருவள்ளூர்,

சப்-கலெக்டர் ரத்னா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் திவ்யஸ்ரீ, திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், பொன்னேரி எம்.எல்.ஏ.வுமான சிறுணியம் பலராமன், திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ,திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன், வேணுகோபால் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார்கள்.

அமைச்சர்கள் அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் 2 ஆயிரத்து 82 பயனாளிகளுக்கு ரூ.17 கோடியே 69 லட்சத்து 15 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், அருள், கடம்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சூரகாபுரம் கே.சுதாகர், ஒன்றிய பொறுப்பாளர் கடம்பத்தூர் ரமேஷ், கூட்டுறவு சங்க தலைவர்கள் இன்பநாதன், பூபாலன், வி.எம்.சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story