மாவட்ட செய்திகள்

விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதல்; மாணவர்கள் உள்பட 6 பேர் கைது + "||" + Bilateral conflict near Virudhunagar 6 people arrested

விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதல்; மாணவர்கள் உள்பட 6 பேர் கைது

விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதல்; மாணவர்கள் உள்பட 6 பேர் கைது
விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் மாணவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள கோட்டநத்தத்தை சேர்ந்தவர் ஆனந்த கண்ணன்(வயது 18). பிளஸ்–2 படித்து வருகிறார். இவருக்கும் பிளஸ்–1 படித்துவரும் தடங்கம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவனுக்கும் இடையே பஸ்சில் செல்லும்போது தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பிளஸ்–1 மாணவனை வழிமறித்து ஆனந்த கண்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவன் மற்றும் அவனது சகோதரர்கள் சந்திரபோஸ்(24), வேல்முருகன் (22), உறவினர்கள் பாண்டி(18), பார்த்திபன்(30) ஆகியோர் ஆனந்தகண்ணனின் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததுடன் ஆனந்தகண்ணனின் சகோதரர் வேல்ராஜை(24) தாக்கினர்.

இதுபற்றி வேல்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் சந்திரபோஸ், வேல்முருகன், பாண்டி, பார்த்திபன் மற்றும் பிளஸ்–1 மாணவன் ஆகியோரை வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்தனர். பிளஸ்–1 மாணவன் கொடுத்தபுகாரின் பேரில் ஆனந்தகண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. வாலாஜாபாத் அருகே எரிசாராயம் கடத்திய தம்பதி கைது
வாலாஜாபாத் அருகே எரிசாராயம் கடத்திய தம்பதியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 19 கேன் எரிசாராயம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
2. தனியார் கல்லூரியில் வேலை தருவதாக போலி நியமன ஆணை அனுப்பி மோசடி செய்த பேராசிரியர் கைது
தனியார் கல்லூரியில் வேலை வாங்கித்தருவதாக பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டு, போலி நியமன ஆணை வழங்கிய கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
3. தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் நாராயணசாமி வீட்டின் முன்பு முற்றுகையிட்டதால் பரபரப்பு
புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமியின் வீட்டின் முன்பு நேற்றிரவு தனியார் மருத்துவக்கல்லூரி மாணவ–மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
4. இலங்கைக்கு மாத்திரைகள் கடத்த முயன்ற வழக்கு தலைமறைவாக இருந்த மீனவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வழியாக இலங்கைக்கு மாத்திரைகள் கடத்த முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த மீனவர்கைது செய்யப்பட்டார்.
5. கூடலூரில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 4 பேர் கைது
கூடலூரில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.