மாவட்ட செய்திகள்

குடோன்களில் பதுக்கி வைத்து பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டாம் - அதிகாரி அறிவுரை + "||" + Do not hunt in kutones and sell crackers

குடோன்களில் பதுக்கி வைத்து பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டாம் - அதிகாரி அறிவுரை

குடோன்களில் பதுக்கி வைத்து பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டாம் - அதிகாரி அறிவுரை
விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பட்டாசு வியாபாரிகள் குடோன்களில் பதுக்கி வைத்து பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டாம் என அதிகாரி கூறினார்.

சிவகாசி,

சிவகாசியில் பட்டாசு வியாபாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிவகாசி தாசில்தார் பரமானந்தராஜா தலைமை தாங்கினார். பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை ஆய்வு தனி தாசில்தார் இப்ராகிம்ஷா முன்னிலை வகித்தார். பட்டாசு வணிகர் சங்க செயலாளர் இளங்கோ வரவேற்று பேசினார். கூட்டத்தில் தனி தாசில்தார் இப்ராகிம்ஷா பேசும்போது கூறியதாவது:–

சிவகாசியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 பட்டாசு கடைகள் புதிதாக தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மட்டும் தற்போது 393 பட்டாசு கடைகள் இயங்கி வருகிறது. பட்டாசு கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் பட்டாசுகளை இருப்பு வைக்க வேண்டும். குடோன், தகர செட் ஆகிய இடங்களில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ய வேண்டாம். இது விபத்துகளை ஏற்படுத்தும்.

அதேபோல் சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளை கடைகளில் வைத்து விற்பனை செய்ய வேண்டாம். உங்கள் கடைகளில் உள்ள பட்டாசுகளுக்கு உரிய ரசீது நீங்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சிவகாசி தீயணைப்புத்துறை அலுவலர் பாலமுருகன் பேசும்போது, பட்டாசு கடைகளில் உள்ள தீயணைப்பு கருவிகளை பழுது இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தண்ணீர், மணல் நிரப்பிய வாளிகளை கடையின் வெளியே கட்டாயம் வைக்க வேண்டும். குறைந்த வயதுடைய தொழிலாளர்களையும், வயது முதிர்ந்தவர்களையும் பணிக்கு வைக்க கூடாது. அவர்களால் பட்டாசு பண்டல்களை கையாளுவதில் சிரமம் ஏற்பட்டு விபத்து உண்டாக வாய்ப்பு உள்ளது. அதேபோல் பட்டாசு பேக்கிங் பிரிவுகளை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இதைதொடர்ந்து சிவகாசி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசகன் பேசும்போது, அரசு விதிக்கும் விதிகளை கடைப்பிடித்தால் மட்டுமே விபத்தை தவிர்க்க முடியும். சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் சப்ளை ஆகிறது. விபத்து இல்லாத தீபாவளியை நாம் கொண்டாட பட்டாசு வியாபாரிகள் மிகவும் கவனத்துடன் பட்டாசு பண்டல்களை கையாள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் குடோனில் இருந்த இரும்பு சட்டங்கள் சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் சாவு
பெங்களூருவில் குடோனில் இருந்த இரும்பு சட்டங்கள் சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. புனேயில் கார் மோதியதில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஆட்டோ தீப்பிடித்தது
புனேயில் கார் மோதியதில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஆட்டோ தீப்பிடித்தது. இதில், தீக்காயம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
3. துருக்கியில் மற்றொரு ரெயில் என்ஜின்மீது அதிவேக ரெயில் மோதி விபத்து; 9 பேர் பலி
துருக்கியின் தலைநகரான அங்காராவில் இருந்து, நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கொன்யா நகருக்கு ஒரு அதிவேக ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
4. சென்னிமலையில் லாரி கவிழ்ந்தது; டிரைவர்கள் உயிர்தப்பினர்
சென்னிமலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர்கள் உயிர்தப்பினார்கள்.
5. பாலம் கட்ட பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் பிரதிபலிப்பான் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்
உடுமலை–தாராபுரம் சாலையில் காரத்தொழுவு ஊராட்சியில் பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளம் அருகே பிரதிபலிப்பான் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.