திருவோத்தூரில் 357 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்


திருவோத்தூரில் 357 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்
x
தினத்தந்தி 14 Oct 2018 4:00 AM IST (Updated: 14 Oct 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

திருவோத்தூரில் 357 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

செய்யாறு,

செய்யாறு டவுன் திருவோத்தூர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு செங்குந்தர் சமுதாயத்திற்கு சொந்தமான வீட்டுமனையில் வீடுகட்டி வசித்து வரும் குடும்பத்தினர் பட்டா வழங்கக்கோரி அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி இடத்தை பார்வையிட்டு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிலையில் நேற்று ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோவில் முன்பாக பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., வி.ஏழுமலை எம்.பி., செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு 357 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி பேசினார். இதில் செய்யாறு தாசில்தார் மகேந்திரமணி, வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பச்சையப்பன், கே.வெங்கடராமன், கே.வெங்கடேசன், அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், எம்.மகேந்திரன், டி.பி.துரை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்யாறு ஆற்றின் குறுக்கே தண்டரையில் இருந்து எரையூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ரூ.11 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டினார்.

Next Story