மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு ஓட்டி வந்த கொத்தனாரும் பலியான பரிதாபம் + "||" + The carnage that killed the motorcycle and the murders of the murderer is also the victim of the misery

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு ஓட்டி வந்த கொத்தனாரும் பலியான பரிதாபம்

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு ஓட்டி வந்த கொத்தனாரும் பலியான பரிதாபம்
கும்பகோணம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி இறந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கொத்தனாரும் பரிதாபமாக பலியானார்.
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வானாபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் கல்யாணி(வயது 80). இவர் நேற்று முன்தினம் இரவு கோவிந்தபுரத்தில் உள்ள கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நாகை மாவட்டம் திருவாவடுதுறை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணி மகன் சங்கர்(26), மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக சங்கர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள், கல்யாணி மீது மோதியது.


இதில் கல்யாணி படுகாயம் அடைந்தார். அதேபோல மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சங்கரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இருவரையும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணி பரிதாபமாக இறந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சங்கரை, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

இந்த விபத்து குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. வீட்டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மர்ம சாவு கொலைசெய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
கொள்ளிடம் அருகே வீட்டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. மயிலம் அருகே: மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சாவு
மயிலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உயிரிழந்தார்.
3. கன்னியாகுமரிக்கு வந்த ரெயிலில் சப்-இன்ஸ்பெக்டர் மர்ம சாவு கழிவறையில் பிணமாக கிடந்தார்
கன்னியாகுமரிக்கு வந்த ரெயிலில் சப்-இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் கழிவறையில் பிணமாக கிடந்தார்.
4. அரூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் பேத்தி கைது திடுக்கிடும் தகவல்கள்
அரூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் பேத்தியை போலீசார் கைது செய்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
5. நாட்டு வெடி வெடித்ததில் பள்ளி மாணவன் சாவு தீபாவளி அன்று சோகம்
சேந்தமங்கலம் அருகே தீபாவளி பண்டிகை அன்று மண்ணில் புதைத்து வைத்து கொளுத்திய நாட்டு வெடி திடீரென்று வெடித்ததில் பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.