மட்டனூர் குப்பைமேட்டில் கிடந்த பையில் நாகப்பாம்பு நகராட்சி ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்


மட்டனூர் குப்பைமேட்டில் கிடந்த பையில் நாகப்பாம்பு நகராட்சி ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2018 10:45 PM GMT (Updated: 13 Oct 2018 7:27 PM GMT)

மட்டனூர் குப்பை மேட்டில் கிடந்த பையில் நாகப்பாம்பு இருந்ததால் நகராட்சி ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

கொழிஞ்சாம்பாறை,

கண்ணூர் அருகே உள்ள மட்டனூர் பஸ் நிலையம் அருகே நகரசபைக்கு சொந்தமான குப்பைகள் சேகரிக்கும் இடம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இங்குதான் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இங்குள்ள குப்பகளை அள்ளும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது குப்பையில் ஒரு பை கிடந்தது. உடனே நகராட்சி ஊழியர்கள் அந்த பையை எடுத்து பிரித்து பார்த்தனர். அப்போது அதில் சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு இருந்தது. இதைப்பார்த்தும் நகராட்சி ஊழியர்கள் பையை கீழே போட்டு விட்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

உடனே இதுகுறித்து மட்டனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த நாகப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறை அதிகாரிகள் நாகப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.


Next Story