மாவட்ட செய்திகள்

ஆட்சியில் இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டில் தி.மு.க.வினர் பதவி விலகினார்களா? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி + "||" + Did DMK resign in corruption in power?

ஆட்சியில் இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டில் தி.மு.க.வினர் பதவி விலகினார்களா? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

ஆட்சியில் இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டில் தி.மு.க.வினர் பதவி விலகினார்களா? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
‘ஆட்சியில் இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தி.மு.க.வினர் பதவி விலகினார்களா?’ என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

கோவை,

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்றுக்காலை விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர். ஆகவே அவர்கள் சட்ட ரீதியாக அதை எப்படி அணுகுகிறார்கள் என்பதை பார்க்கவேண்டும். யார் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் அது விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் குற்றச்சாட்டு வந்ததினால் பதவி விலக வேண்டும் என்று சில பேர் சொல்வது தவறு.

தி.மு.க. போன்ற கட்சிகள் மத்திய அரசுடன் இணைந்து ஆட்சியில் இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டு வந்தது. அப்போது அவர்கள் பதவி விலகினார்களா? இல்லையே. எனவே ஊழல் குற்றச்சாட்டு மற்றும் ஊழல் எந்த விதத்திலும் ஓப்புக்கொள்ள முடியாத ஒன்று. அது நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டும். சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். துணைவேந்தர்கள் நியமனத்தில் எழுந்துள்ள ஊழல்கள் குறித்து கவர்னர் மறுக்கவில்லை. கல்வியாளர்களை சந்தித்தபோது தான் எனக்கு இப்படிபட்ட தகவல்கள் கிடைத்தது என்று தான் கூறினார். ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. கவுரவ விரிவுரையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த வேண்டும்; தி.மு.க. வலியுறுத்தல்
கவுரவ விரிவுரையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
2. பன்றிக்காய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தி.மு.க. வலியுறுத்தல்
காரைக்குடி பகுதியில் பன்றிக்காய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
3. தி.மு.க. வேண்டாம் என ஒதுக்கினாலும் ம.தி.மு.க., வி.சி.க. விலகும் நிலையில் இல்லை; பொன். ராதாகிருஷ்ணன்
தி.மு.க. வேண்டாம் என ஒதுக்கினாலும் ம.தி.மு.க., வி.சி.க. விலகும் நிலையில் இல்லை என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
4. “தி.மு.க. எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்” அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
எத்தனை கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி வைத்தாலும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
5. புதுவையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியும்; கட்சியினருக்கு, தேர்தல் பொறுப்பாளர் வேண்டுகோள்
புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர, கட்சி தொண்டர்கள், அமைப்பாளர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தேர்தல் பொறுப்பாளர் சபாபதி மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.