மாவட்ட செய்திகள்

வேதாரண்யத்தில், அய்யப்ப பக்தர்கள் ஊர்வலம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி நடந்தது + "||" + In Vedaranyam, Ayyappa devotees rallied to review the Supreme Court verdict

வேதாரண்யத்தில், அய்யப்ப பக்தர்கள் ஊர்வலம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி நடந்தது

வேதாரண்யத்தில், அய்யப்ப பக்தர்கள் ஊர்வலம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி நடந்தது
சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்ல அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேதாரண்யத்தில் அய்யப்ப பக்தர்கள் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
வேதாரண்யம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து அய்யப்ப பக்தர்கள் ஊர்வலம் நடை பெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று தாசில்தார் அலுவலகத்தை அடைந்தது. அப்போது அய்யப்ப பக்தர்கள், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அய்யப்ப பக்தர்கள் கையெழுத்திட்ட மனுவை தாசில்தார் ஸ்ரீதரிடம் வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி தஞ்சையில், தொழிற்சங்கத்தினர் ஊர்வலம் ரெயில் மறியல் செய்ய முயன்ற 22 பேர் கைது
வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலம் நடத்தினர். ரெயில் மறியல் செய்ய முயன்ற விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. அனுமன்ஜெயந்தியை யொட்டி மூலை அனுமாருக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
அனுமன்ஜெயந்தியையொட்டி தஞ்சை மூலை அனுமாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
3. பாடாலூர் ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் தரிசனம்
பாடாலூர் வழிதுணை ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4. ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
5. கரூர் மாவட்ட கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் தரிசனம்
கரூர் மாவட்ட கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.