மாவட்ட செய்திகள்

ஆவணங்கள் இன்றி இயக்கிய 10 ஆட்டோக்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை + "||" + 10 autos were seized without documents Local Transport Officer

ஆவணங்கள் இன்றி இயக்கிய 10 ஆட்டோக்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை

ஆவணங்கள் இன்றி இயக்கிய 10 ஆட்டோக்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை
நாகை பகுதியில் ஆவணங்கள் இன்றி இயக்கிய 10 ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்தார்.
நாகப்பட்டினம்,

நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி கொண்டு செல்வதாக மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாருக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரிலும், துணை போக்குவரத்து ஆணையர் உதயகுமார் அறிவுறுத்தலின் படியும் நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி தலைமையில், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் அலுவலர்கள் நாகை பகுதிகளில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


இதில் நாகை-நாகூர் சாலையில் நடந்த சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றியும், அதிக பயணிகள் ஏற்றி கொண்டும், கூடுதல் இருக்கைகள் வைத்து கொண்டு அதிவேகமாக வந்தது தொடர்பாக 9 ஆட்டோக்கள் மற்றும் சரக்கு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள்நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை 11 பேர் கைது
ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்ததாக புகார். ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை. 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. கீழ்வேளூரில் மணல் கடத்திய 2 பேர் கைது டிராக்டர் பறிமுதல்
கீழ்வேளூரில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.
3. வாகன சோதனையின்போது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது
வாகன சோதனையின்போது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
4. மார்த்தாண்டம் அருகே சொகுசு கார்களில் கடத்திய 650 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் டிரைவர் கைது
மார்த்தாண்டம் அருகே சொகுசு கார்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 650 லிட்டர் மண்எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
5. ஈரோடு கலெக்டர் வீட்டுக்கு இறந்த சிறுமியின் உடலை கொண்டு செல்ல முயன்றவர் கைது
இறந்த சிறுமியின் உடலை ஈரோடு கலெக்டர் வீட்டுக்கு கொண்டு செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் சோதனையை மீறி மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.