மாவட்ட செய்திகள்

ஆற்றில் மூழ்கியவர்களை மீட்பது எப்படி? தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் + "||" + How to rescue the sunken river Firefighters demonstration

ஆற்றில் மூழ்கியவர்களை மீட்பது எப்படி? தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம்

ஆற்றில் மூழ்கியவர்களை மீட்பது எப்படி? தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம்
ஆற்றில் மூழ்கியவர்களை மீட்பது எப்படி? என்று தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.
தஞ்சாவூர்,

சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி தஞ்சை ரெயிலடியில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் நேற்றுகாலை புறப்பட்டது. ஊர்வலத்தை கலெக்டர் அண்ணாதுரை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஜி.ஏ.கெனால் சாலையில் விநாயகர் கோவில் அருகே நிறைவடைந்தது.


இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட தீயணைப்பு அலுவலர் இளஞ்செழியன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகேசன், உதவி ஆணையர்(கலால்) தவசெல்வம், தாசில்தார் அருணகிரி, பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் கண்ணன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கல்லணைக்கால்வாயில் பேரிடர் மீட்பு குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். ஆற்றில் விழுந்தவர்கள், வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும். வெள்ளத்தில் சிக்கி கொண்டால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கொண்டு எப்படி தப்பி செல்ல வேண்டும் என்று காலிக்குடங்கள், கேன்கள், உரிக்காத தேங்காய்கள், வாழை மட்டை ஆகியவற்றை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்தனர். தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தவுடன் அவர்களுக்கு எப்படி முதலுதவி அளிக்க வேண்டும் என்றும் செய்து காண்பித்தனர். மேலும் பேரிடர் மீட்பு உபகரணங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் விளக்கி கூறினர்.

தஞ்சை மாவட்ட தீயணைப்பு அலுவலர் இளஞ்செழியன் கூறும்போது, இந்த ஓராண்டில் மட்டும் 43 பேர் ஆறு, குளங்களில் மூழ்கினர். இவர்கள் அனைவரும் 16 வயது முதல் 23 வயதுடையவர்கள். இவர்களில் 5 பேர் தான் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பரதநாட்டியம், சிலம்பாட்டத்தை எப்படி கற்று கொள்கிறீர்களோ? அதேபோல நீச்சல் கற்று கொள்ள வேண்டும். ஆற்றில் விழுந்தவர்களை மீட்க செல்லும்போது பின்புறமாக தான் செல்ல வேண்டும். அவர்கள் முன்பாக சென்றால் உயிர் பயத்தில் நம்முடைய கழுத்தை கட்டி பிடித்து கொண்டால் நாமும் சேர்ந்து தண்ணீரில் மூழ்க வேண்டிய நிலை ஏற்படும். தலைமுடி பிடித்தோ அல்லது சேலை, துப்பட்டா, வேட்டியை பிடித்தோ இழுத்து வர வேண்டும். படகில் பயணம் செய்யும்போது நின்று கொண்டு பயணிக்கக்கூடாது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்னாம்பள்ளியில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மின்னாம்பள்ளியில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
2. மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
3. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பு
அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை கொண்ட வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு குறும்படங்களை கிராமங்கள்தோறும் ஒளிப்பரப்பப்பட உள்ளது.
4. 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினர் விழிப்புணர்வு பணி
திருவாரூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினர் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
5. மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.