மாவட்ட செய்திகள்

நம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் + "||" + Nambiyur part stores Confiscated plastic materials

நம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

நம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
நம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

நம்பியூர்,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு நடத்தி தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகிறார்கள்.

நம்பியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 150–க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஆர்.கணேசமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் நம்பியூர் பகுதியில் உள்ள 50–க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள்.

இந்த சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர் போன்றவை கடைகளில் விற்பனைக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தம் 35 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் அதை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். சில கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதேபோல் நம்பியூர் பகுதியில் தொற்று நோய்களை உண்டாக்கும் கொசுக்களை அழிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது மழைநீர் தேங்கிய பழைய டயர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. மதுரை எஸ்.ஆலங்குளம், ஆனையூர் பகுதிகளில் 5 நாட்களாக இரவில் மின் தடை; பொதுமக்கள் கடும் அவதி
மதுரை எஸ்.ஆலங்குளம், ஆனையூர் பகுதிகளில் தொடர்ந்து 5 நாட்களாக இரவு முழுவதும் மின் தடை ஏற்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
2. சேலத்தில் கடைகளில் அதிகாரிகள் சோதனை: 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.42 ஆயிரம் அபராதம்
சேலத்தில் உள்ள கடைகளில் சுகாதார அதிகாரிகள் நடத்திய சோதனையில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
3. நேபாளத்தில் தாவூத் இப்ராகிம் கூட்டாளி உள்பட 4 பேர் கைது
நேபாளத்தில் தாவூத் இப்ராகிம் கூட்டாளி உள்பட 4 பேர் கைது. அவர்களிடம் இருந்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற ரூ.7.5 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
4. இந்தியா-வங்காளதேச எல்லைப் பகுதியில் ரூ.5¾ கோடி தங்க கட்டிகள் பறிமுதல்
வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் தங்கம் கடத்தி கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
5. விற்பனைக்கு வீட்டில் பதுக்கிய 113 மதுபாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது
கருங்கல் அருகே எட்டணி பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி, விற்பனை செய்வதாக கருங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.