மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் வேளாண்மை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + The farm officer in Perambalur committed suicide by hanging

பெரம்பலூரில் வேளாண்மை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

பெரம்பலூரில் வேளாண்மை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
பெரம்பலூரில் அரசு உதவி வேளாண்மை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் வடக்குமாதவி ரோடு, கணபதி நகர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி விஜயா. இந்த தம்பதியினருக்கு ஹேமலதா என்கிற மகளும், பிரசன்னகுமார் (வயது 24) என்கிற மகனும் உள்ளனர். கருணாகரன் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அரசு பள்ளியில் ஆசிரியராகவும், விஜயா மருவத்தூர் அரசு பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். ஹேமலதா தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். பிரசன்னகுமார் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் தங்கியிருந்து, அங்குள்ள அரசு பருத்தி ஆராய்ச்சி மையத்தில் உதவி வேளாண்மை அதிகாரியாக பணியாற்றி வந்தார். விடுமுறை நாட்களில் பிரசன்னகுமார் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் பிரசன்னகுமார் தனது சகோதரி ஹேமலதாவிடம், செல்போனில் தொடர்பு கொண்டு விடுமுறை எடுத்து உள்ளதால் நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.


அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் பிரசன்னகுமார் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் பெற்றோர் பள்ளிகளுக்கும், சகோதரி கல்லூரிக்கும் சென்று விட்டதால் வீட்டில் பிரசன்னகுமார் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து கருணாகரன் வீடு திரும்பினார். அப்போது அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அவரது மகன் பிரசன்னகுமார் ஒரு அறையில் உள்ள மின்விசிறியில் கயிற்றில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரசன்னகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசன்னகுமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. விருதுநகர் அருகே பூட்டிய வீட்டில் 2 பேர் பிணமாக கிடந்த சம்பவம்: காதலை கைவிடாத மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை
விருதுநகர் அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய்- மகள் பிணமாக கிடந்த விவகாரத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. காதலை கைவிடாத மகளை கொலை செய்து விட்டு, தாய் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
2. திருமணமான 20 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
திருமணமான 20 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
3. நர்சிங் மாணவி தீக்குளித்து தற்கொலை
பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த மாலதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
4. குளச்சல் அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
குளச்சல் அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. கடன் பிரச்சினை காரணமாக விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
கடன் பிரச்சினை காரணமாக தனியார் விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.