மாவட்ட செய்திகள்

திருவரங்குளத்தில் கோவில்கள் உள்பட 4 இடங்களில் திருட முயன்ற வாலிபர் கைது + "||" + A youth who tried to steal 4 places in Tiruvarangankulam temples was arrested

திருவரங்குளத்தில் கோவில்கள் உள்பட 4 இடங்களில் திருட முயன்ற வாலிபர் கைது

திருவரங்குளத்தில் கோவில்கள் உள்பட 4 இடங்களில் திருட முயன்ற வாலிபர் கைது
திருவரங்குளத்தில் கோவில்கள் உள்பட 4 இடங்களில் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் புகழ்பெற்ற சிவன்கோவில் உள்ளது. இங்கு கடந்த 9-ந்தேதி இரவு அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்றார். இதைக்கண்ட பொதுமக்கள் திருடன்...திருடன்... என சத்தம் போடவே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களுடன் சேர்ந்து அந்த வாலிபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் அங்கிருந்து தப்பிய வாலிபர் திருவரங்குளம் மாவு மில்லின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார். ஆனால் அங்கு எந்த பொருட்களும், பணமும் இல்லாததால் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் போலீசார் மற்றும் பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க அப்பகுதியை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஊழியரும், மாற்றுத்திறனாளியுமான செல்வராஜ் வீட்டிற்குள் சென்று வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் 4 செல்போன்களை திருடினார். மேலும் செல்வராஜின் 3 சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு, போலீஸ் கண்ணில் சிக்காமல் சென்று விட்டார். இதைத்தொடர்ந்து திருவரங்குளம் பாரதியார் நகரில் உள்ள புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது செல்வராஜ் வீட்டில் திருடிய 20 பவுன் நகை மற்றும் 4 செல்போன்களை கோவிலின் வெளிப்பகுதியில் உள்ள மரக்கிளையில் வைத்துள்ளார். பின்னர் ஜன்னலை உடைத்து அதன் வழியாக கோவிலுக்குள் புகுந்தார்.

இந்தநிலையில் கோவில் அருகே செல்வராஜ் வீட்டில் திருடப்பட்ட 3 சக்கர வண்டி நின்று கொண்டிருந்தது. இதனை கண்ட போலீசார், அவனை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர் அரிவாளை காட்டி. மிரட்டி தப்பியோடி விட்டார். இதையடுத்து போலீசார் மரக்கிளையில் அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் 3 செல்போன்களை கைப்பற்றினர். மேலும் திருட வந்த வாலிபர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். தப்பி ஓடிய போது அந்த மோட்டார் சைக்கிளையும் விட்டு சென்று விட்டார். அதையும் போலீசார் கைப்பற்றினர்.

இந்த மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் கர்மியா தெருவை சேர்ந்த முகமது தமீம் (வயது 29) என்பவர் 4 இடங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை யடுத்து போலீசார் நேற்று கூத்தாநல்லூர் சென்று அங்கு பதுங்கி இருந்த முகமது தமீமை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் 4 இடங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூரில் வாலிபரை கொலை செய்த உறவினர் கைது; முன்விரோதம் காரணமாக தீர்த்துக்கட்டியது அம்பலம்
திருப்பூரில் வாலிபரை கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக தீர்த்துக்கட்டியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
2. “என் மகளை பலாத்காரம் செய்தவர்களை கைது செய்ய உத்தரவிடுங்கள்”: இளம்பெண்ணின் தாயார் நீதிபதிக்கு கடிதம், மதுரை ஐகோர்ட்டு வழக்குப்பதிவு
“என் மகளை பலாத்காரம் செய்தவர்களை கைது செய்ய வேண்டும்“ என்று இளம்பெண்ணின் தாயார் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார். அதன் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
3. பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உருவபொம்மை எரிக்க முயற்சி; விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் கைது
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உருவபொம்மையை எரிக்க முயற்சி செய்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
4. எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில், பஸ் மறியல்; 200 பேர் கைது
திருமாவளவனை அவதூறாக விமர்சித்த எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி ரெயில், பஸ் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 103 பேர் கைது
காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்பட 103 பேர் கைது செய்யப்பட்டனர்.