பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பெருமாள் கோவில் களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நொய்யல்,
நொய்யலை அடுத்த கோம்புபாளையத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து ஊர்வலமாக புனிதநீர் எடுத்து வந்தனர். பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மலர், துளசி மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி சேங்கல் மலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், லிங்கத்தூரில் உள்ள லட்சுமிநாராயண பெருமாள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Related Tags :
Next Story