மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் அருகே துணிகரம்: பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணம் கொள்ளை + "||" + The venture near dindigul: Attacked women 9 pound jewels, money laundering

திண்டுக்கல் அருகே துணிகரம்: பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணம் கொள்ளை

திண்டுக்கல் அருகே துணிகரம்: பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணம் கொள்ளை
திண்டுக்கல் அருகே, பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தாடிக்கொம்பு,

பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டி பாக்கியலட்சுமி நகரை சேர்ந்தவர் லட்சுமிஅம்மாள் (வயது 80). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு உதவியாக பொன்செல்வி (40) என்பவர் உடன் வசித்து வருகிறார். நேற்று மதியம் 2 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அதில், ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். மற்ற 2 பேர், வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் லட்சுமி அம்மாளையும், பொன்செல்வியையும் தாக்கியதுடன் கத்தியை காட்டி மிரட்டினர்.


மேலும் அவர்கள் அணிந்திருந்த 9 பவுன் நகைகள் மற்றும் பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் லட்சுமி அம்மாள் புகார் செய்தார். அதன் பேரில், பெண்களை தாக்கி நகைகள், பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. ராமநாதபுரம் கடல் பகுதியில் குளச்சல் மீனவர்கள் மீது தாக்குதல் விசைப்படகு சேதம்
ராமநாதபுரம் கடல் பகுதியில் குளச்சல் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அவர்களது படகு சேதமானது.
2. திண்டுக்கல்லில் பரபரப்பு: பட்டதாரி வாலிபர் வெட்டி படுகொலை
திண்டுக்கல்லில் பட்டதாரி வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
3. வில்லியனூர் அருகே, வீடு புகுந்து தொழிலாளி மீது தாக்குதல்
வில்லியனூர் அருகே தொழிலாளி வீடு புகுந்து தாக்கப்பட்டார். அது தொடர்பாக ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பிரதமர் மோடி செல்வாக்கு உயர்வு
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு
பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு தெரிவித்தது.