தியாகி சங்கரலிங்கனாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்
தியாகி சங்கரலிங்கனாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தினார்.
சென்னை,
தியாகி சங்கரலிங்கனாரின் 62-வது நினைவு நாள் நிகழ்ச்சி பெருந்தலைவர் மக்கள் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டு, தியாகி சங்கரலிங்கனார் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் எம்.ஏ.எம்.பாலாஜி, செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், சென்னை மேற்கு மண்டலத்தலைவர் எம்.வைகுண்டராஜா, தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய என்.ஆர். தனபாலன், ‘சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டி 76 நாட்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்தவர் சங்கரலிங்கனார். அவருக்கு மணிமண்டபத்தையும், முழு உருவச்சிலையும் தமிழக அரசு அமைக்க வேண்டும், எழிலகம் கட்டிடத்திற்கு அவர் பெயரை சூட்ட வேண்டும்’ என்றார்.
கிண்டியில் உள்ள சங்கரலிங்கனார் சிலைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி னர். நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் நாடார் மற்றும் திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்கம் சார்பிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைவர் ராஜகோபால், சி.திருப்புகழ், பொருளாளர் சிங்கராயர், ராஜசேகரன், பச்சையப்பன், மாணிக்கவேல், ஹரிதாஸ், சாமுவேல், தேவராஜ் சீலன், வி.சரவணபவன், சேம், தேவசகாயம், செந்தில்குமார், நாகராஜ், மாணிக்கவாசகம், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிண்டியில் உள்ள சங்கரலிங்கனார் சிலைக்கு நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
Related Tags :
Next Story