பராமரிப்பு பணி காரணமாக துறைமுக வழித்தடத்தில் இன்று ரெயில் சேவைகள் ரத்து


பராமரிப்பு பணி காரணமாக துறைமுக வழித்தடத்தில் இன்று ரெயில் சேவைகள் ரத்து
x
தினத்தந்தி 14 Oct 2018 4:30 AM IST (Updated: 14 Oct 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சி.எஸ்.எம்.டி. - கோரேகாவ் இடையே ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சி.எஸ்.எம்.டி. - கோரேகாவ் இடையே ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மும்ரா - கல்வா

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள மும்ரா - கல்வா இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9.07 மணி முதல் மாலை 6.02 மணி வரை திவாவில் இருந்து புறப்படும் ஸ்லோ ரெயில்கள் முல்லுண்டு வரை விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும்.

எனவே இந்த ரெயில்கள் மும்ரா, கல்வா ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காது. பயணிகள் தானேயில் இருந்து கல்யாண் நோக்கி வரும் ஸ்லோ ரெயில்களில் மும்ரா, கல்வா செல்லலாம்.

ரெயில்சேவை ரத்து

துறைமுக வழித்தடத்தில் இன்று காலை 11.10 மணி முதல் மாலை 4.40 மணி வரை சி.எஸ்.எம்.டி. - சுன்னாப்பட்டி, சி.எஸ்.எம்.டி. - பாந்திரா இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 11.34 மணி முதல் மாலை 4.23 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கும், காலை 9.53 மணி முதல் பிற்பகல் 2.44 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் ரெயில்கள் இயக்கப்படாது.

இதேபோல காலை 9.56 மணி முதல் மாலை 4.16 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பாந்திரா, அந்தேரி மற்றும் கோரேகாவிற்கும் காலை 10.45 மணி முதல் மாலை 4.58 மணி வரை கோரேகாவ், அந்தேரி மற்றும் பாந்திராவில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் மின்சார ரெயில்கள் இயக்கப்படாது. இதற்கிடையே துறைமுக வழித்தடத்தில் குர்லா-பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

மேற்கு ரெயில்வே

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இன்று காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.35 மணி வரை சர்ச்கேட் - மும்பை சென்டிரல் இடையே இருவழிப்பாதைகளிலும் விரைவு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே இந்த நேரத்தில் விரைவு ரெயில்கள் அனைத்தும் சர்ச்கேட் - மும்பை சென்டிரல் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Next Story