டெங்கு கொசு ஒழிப்பு பணி: நெல்லிக்குப்பம் நகரில் கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு
நெல்லிக்குப்பம் நகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் அன்புசெல்வன் நேற்று ஆய்வு செய்தார்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், நேற்று நெல்லிக்குப்பம் நகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை ஆய்வு செய்தார். திருக்கண்டேசுவரத்துக்கு சென்ற அவர், அங்குள்ள வீடுகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கியிருக்கிறதா? என்பதை பார்வையிட்டார், தெருக்களில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றுமாறு நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
பின்னர் நெல்லிக்குப்பம் ஆலைரோடு பகுதியில் உள்ள நகராட்சி பள்ளி எதிரில் கிடந்த டயர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என்று கண்டித்தார்.
குடிநீரில் குளோரின் சரியான அளவில் கலக்கப்படாததை கண்டறிந்த அவர், நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) மகராஜனிடம், குடிநீரில் சரியான அளவில் குளோரின் கலந்து வினியோகிக்குமாறு உத்தரவிட்டார்.
பின்னர் நெல்லிக்குப்பத்தான் வாய்க்கால் பகுதிக்கு சென்றார். அங்கு துப்புரவு பணி சரியாக நடக்கவில்லையென்று கலெக்டர் முன்னிலையில் அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலெக்டர் சமாதானம் செய்தார்.
பின்னர் அங்குள்ள டயர்கடையில் அடுக்கிவைக்கப்பட்டு இருந்த டயர்களில் தேங்கியிருந்த தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இருப்பதை பார்வையிட்ட அவர், டயர் கடைக்காரருக்கு அபராதம் விதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன்பிறகு கலெக்டர் அன்பு செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமை அரசு அலுவலக வளாகங்களை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. மாவட்ட நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கைகளால் டெங்கு காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள வீடுகளிலும் தெருக்களிலும் தண்ணீர் தேங்கும் வகையில் தேவையற்ற பொருட்கள் இருக்கக்கூடாது, அவற்றை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்று கலெக்டர் அன்பு செல்வன் கூறினார்.
அப்போது ஆணையாளர்(பொறுப்பு) மகராஜன், தாசில்தார் ஆறுமுகம், மாவட்ட மலேரியா அலுவலர் பழனிசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஷாஜகான் மற்றும் பலர் உடன் இருந்தனர். இதன்பிறகு கலெக்டர் கடலூருக்கு சென்றார்.
இதன்பிறகு ஆணையாளர் மகராஜன், தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகருக்கு சென்றனர். அங்கு உள்ள பொதுசுகாதார வளாகத்தை சுற்றிலும் கழிவுநீர் தேங்கியிருப்பதால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியவில்லை என்று அவர்களிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.
இது தொடர்பாக ஆணையாளரும், தாசில்தாரும் தனியார் சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்களிடம் அந்த பகுதியில் கழிவுநீர் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

Related Tags :
Next Story