வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எந்திர மனிதர்கள் வடிவமைப்பு போட்டி அர்ஜென்டினா நாட்டு தூதர் தொடங்கி வைத்தார்


வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எந்திர மனிதர்கள் வடிவமைப்பு போட்டி அர்ஜென்டினா நாட்டு தூதர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Oct 2018 4:25 AM IST (Updated: 14 Oct 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ‘கிராவிடாஸ்’ என்கிற சர்வதேச அளவிலான அறிவுசார் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை விழாவில் ‘ரோபோவார்ஸ்’ என்கிற எந்திர மனிதர்கள் வடிவமைப்பு போட்டி நடந்தது.

வேலூர்,

இந்தியாவிற்கான அர்ஜென்டினா நாட்டின் தூதர் டேனியல்சுபுரு தொடங்கி வைத்தார். இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 26 உயர்கல்வி நிறுவனங்களின் மாணவ-மாணவிகள் தாங்கள் உருவாக்கிய ரோபோக்களின் வடிவமைப்பினை செயல் விளக்கத்துடன் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், வி.ஐ.டி. துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், கிராவிடாஸ் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரநாத்ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ‘கிராவிடாசின்’ மற்றொரு நிகழ்வாக ‘ஆர்.சி.பாஜா’ என்கிற ரேஸ்கார் வடிவமைப்பு போட்டி நடந்தது. இதனை அமெரிக்க எந்திரவியல் பொறியாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில், அண்ணா, வி.ஐ.டி. பல்கலைக்கழகங்கள் உள்பட 15 குழுவினர் தாங்கள் வடிவமைத்த பந்தய கார்களை இயக்கி காட்டினர்.

இதே போன்று ‘நீர் ஆதாரங்கள்’ என்கிற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் அர்ஜென்டினா நாட்டின் தூதர் டேனியல்சுபுரு, ஊட்டியை சேர்ந்த இந்தியமண் மற்றும் நீர்பாதுகாப்பு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி கே.ராஜா ஆகியோர் பேசினர்.

Next Story