பா.ஜனதா பெண் பிரமுகர் கொலையில் வீட்டு வேலைக்காரர் கைது ‘வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்று திட்டியதால் தீர்த்து கட்டினார்’
பா.ஜனதா பெண் பிரமுகர் கொலை வழக்கில் அவரது வீட்டில் வேலை பார்த்தவரை போலீசார் கைது செய்தனர்.
வசாய்,
பா.ஜனதா பெண் பிரமுகர் கொலை வழக்கில் அவரது வீட்டில் வேலை பார்த்தவரை போலீசார் கைது செய்தனர். வேலையை ஒழுங்காக செய்ய வில்லை என்று திட்டி யதால் தீர்த்து கட்டியது அம்பலமானது.
பா.ஜனதா பெண் பிரமுகர் கொலை
பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா பகுதியில் வசித்து வந்தவர் ரூபாலி சவான் (வயது38). இவர் அந்த பகுதி பா.ஜனதா மகளிரணி தலைவி ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன் ரூபாலி சவான் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரின் உடலில் காயங்கள் இருந்தன.
இந்தநிலையில் பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர்.
கைது
இதில் சம்பவம் நடந்த நாள் முதல் ரூபாலி சவான் வீட்டில் வேலை பார்த்து வந்த வாலிபர் நித்தின் (வயது20) தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பீட் மாவட்டத்தில் பதுங்கி இருந்த அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் தான் ரூபாலி சவானை கொலை செய்தது தெரியவந்தது.
ரூபாலி சவான் வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்வது இல்லை என கூறி அடிக்கடி வாலிபரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் சம்பவத்தன்று கூர்மையான ஆயுதத்தால் ரூபாலி சவானை தாக்கி கொலை செய்து, பின்னர் உடலை வீட்டில் போட்டு பூட்டிவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நித்தினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு அவரை 17-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
Related Tags :
Next Story