மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது + "||" + Pilgrimage started from Kanyakumari to Kalimalai

கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது

கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது
கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு இருமுடி கட்டுடன் புனித யாத்திரை நேற்று தொடங்கியது. இந்த யாத்திரை நாளை (செவ்வாய்க்கிழமை) காளிமலையை சென்றடையும்.
கன்னியாகுமரி,

அருமனை அருகே பத்துகாணி காளிமலையில் பத்திரகாளிஅம்மன் கோவிலில் துர்காஷ்டமி திருவிழா நேற்று தொடங்கி வருகிற 18–ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் இருமுடிகட்டு மற்றும் புனிதநீர் சுமந்து புனித யாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர்.


இதன் தொடக்கவிழா கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் முன்பு நேற்று காலையில் நடந்தது. விழாவுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வராசி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அன்பாலய நிறுவனர் ஸ்ரீகுருசிவசந்திரர் ஆசியுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.ஆர். காந்தி, மாவட்ட இந்து முன்னணி தலைவர் மிசா சோமன், துணை தலைவர் வக்கீல் அசோகன், இலங்கை அறங்காவலர் செலந்தில்வேள், திருமடங்களின் மாநில அமைப்பாளர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த யாத்திரை நேற்று விவேகானந்தபுரம், கொட்டாரம்,  சுசீந்திரம், நாகர்கோவில்,  பார்வதிபுரம் வழியாக தோட்டியோடு சென்றது. புனித யாத்திரையாக சென்றவர்கள் நேற்று இரவு தோட்டியோட்டில் தங்கினர். இன்று (திங்கட்கிழமை) தோட்டியோட்டில் இருந்து புறப்பட்டு தக்கலை, சாமியார்மடம், பம்மம், மார்த்தாண்டம், உண்ணாமலைகடை, ஆற்றூர் வழியாக சென்று தொழிச்சலில் தங்கும். அங்கிருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் புறப்பட்டு சிதறால், வெள்ளாங்கோடு, அருமனை, களியல், கடையாலுமூடு வழியாக பத்துகாணி காளிமலை பத்திரகாளி அம்மன் கோவிலை சென்றடையும். தொடர்ந்து, அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

1. மயிலாடுதுறையில் துலா உற்சவத்தையொட்டி அமாவாசை தீர்த்தவாரி பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்
மயிலாடுதுறையில் துலா உற்சவத்தையொட்டி அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடினர்.
2. கன்னியாகுமரியில் இருந்து இரணியலுக்கு ஷீரடி சாய்பாபா ரத யாத்திரை ஊர்வலம்
கன்னியாகுமரியில் இருந்து இரணியலுக்கு ஷீரடி சாய்பாபா ரத யாத்திரை ஊர்வலம் சென்றது.
3. ஆடி அமாவாசையையொட்டி வேதாரண்யம் கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்
ஆடி அமாவாசையையொட்டி வேதாரண்யம் கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
4. மானசரோவருக்கு சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள் 24 பேர் நேபாளத்தில் சிக்கி தவிப்பு
மானசரோவருக்கு சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள் 24 பேர், மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் சிக்கி ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை