மார்த்தாண்டம் அருகே வேன்–ஆட்டோ மோதி 2 பேர் பலி: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சி
மார்த்தாண்டம் அருகே வேன்–ஆட்டோ மோதி 2 பேர் பலியான விபத்து தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குழித்துறை,
குமரி மாவட்டம் முளகுமூடு அருகே வெள்ளிகோடு, பிரம்புவிளையை சேர்ந்தவர் ஜான் அந்தோணி. அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி சுபலீலா (வயது 50). இவர்கள் நேற்று முன்தினம் மார்த்தாண்டத்தில் இருந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் புறப்பட்டனர். ஆட்டோவை கூட்டமாவு பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (52) ஓட்டிச் சென்றார்.
ஆட்டோ சிராயன்குழி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த வேனும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் ஸ்டீபன் ராஜ், சுப லீலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். ஜான் அந்தோணி படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வேன் டிரைவர் மனோகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்தநிலையில், விபத்து நடந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் விபத்து காட்சி தெளிவாக பதிவாகி உள்ளது. அந்த காட்சி தற்போது சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விபத்து நடந்த இடம் வளைவான பகுதியாகும். அந்த வளைவில் ஆட்டோ வலதுபுறமாக ஏறி சென்ற நிலையில் எதிரே வேன் வருகிறது. ஆட்டோ மீது மோதாமல் இருக்க வேன் டிரைவர் இடதுபுறமாக திருப்புகிறார். அதே நேரத்தில் ஆட்டோவும் இடதுபுறமாக திரும்ப வேனும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிறது. அத்துடன், வேன் அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீதும் மோதுகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவசரத்தில் ஆட்டோ டிரைவர் அவ்வாறு வேகமாக சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காததுதான் இரண்டு உயிர்கள் பலியாக முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

Related Tags :
Next Story