சிந்தாதிரிப்பேட்டையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி: இணைப்பு குழாய் சேதத்தால் வீணான குடிநீர்
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியின்போது, பூமிக்கடியில் செல்லும் இணைப்பு குழாய் சேதம் அடைந்ததால் குடிநீர் வெளியேறி வீணாக கூவம் ஆற்றில் கலந்தது.
சென்னை,
சென்னை முழுவதும் கூவம் ஆறு சீரமைப்பு மற்றும் நீர்நிலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. சிந்தா திரிப்பேட்டை டேம்ஸ் சாலையில் குடியிருப்புகள் மற்றும் அங்கிருந்த சில கடைகள் அகற்றப்பட்டு, இடம் சீரமைப்பு பணி நடக்கிறது. மேலும் அப்பகுதியை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
இந்தநிலையில் டேம்ஸ் சாலையில் தடுப்பு சுவர் அமைப்பதற்காக, ஜே.சி.பி. எந்திரத்தால் அங்குள்ள நிலப்பரப்பு தோண்டப்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக பூமிக்கு அடியில் சென்ற குடிநீர் வாரிய இணைப்பு குழாய் உடைந்து சேதம் அடைந்தது.
இதையடுத்து அந்த குழாயில் இருந்து குடிநீர் குபுகுபுவென வெளியேறி அருகில் உள்ள கூவம் ஆற்றில் கலந்தது. இதற்கிடையில் நேற்று அதிகாலை அந்த வழியாக நடைப்பயிற்சிக்கு சென்றவர்கள், வாகன ஓட்டிகள் பூமிக்கடியில் இருந்து குடிநீர் வெளியேறி கூவம் ஆற்றில் வீணாக கலப்பதை கண்டனர். உடனடியாக குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக அந்த வழித்தடத்தில் குடிநீர் இணைப்பை நிறுத்தினர். பின்னர் தற்காலிக மூடிகள் கொண்டு அந்த குழாயை அடைத்தனர். அதனைத்தொடர்ந்தே குடிநீர் வெளியேறுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.
விடிய விடிய குடிநீர் வீணாக வெளியேறி கூவம் ஆற்றில் கலந்து வீணாகியதால் சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
“ஏற்கனவே 2 நாட்களுக்கு ஒருமுறை தான் இப்பகுதிகளில் தண்ணீர் வருகிறது. இன்றைக்கு (நேற்று) குடிநீர் வரும் நாளாகும். ஆனால் பெரும்பாலான வீடுகளில் உள்ள குழாய்களில் தண்ணீர் வரவில்லை. குடிநீர் குழாய் சேதம் அடைந்தபோதே, கவனித்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் குடிநீர் வீணாவதை தடுத்திருக்கலாம்”, என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story