திருவாரூரில் தனியார் வங்கி மேலாளர் உள்பட 2 பேர் மீது தாக்குதல் 2 பேர் கைது
திருவாரூரில் தனியார் வங்கி மேலாளர் உள்பட 2 பேரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் அருகே உள்ள கமலாபுரம் மூலங்குடியை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 32). இவர் திருவாரூர் விஜயபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் கிளை மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த வங்கியில் திருவாரூர் விஜயபுரம் திலகர் தெருவை சேர்ந்த கமலநாதன் (55) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை அடமானம் வைத்து ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். கடன் தொகையை கட்ட வங்கிக்கு சென்றபோது, அதற்கான வட்டி தொகை ரூ.1,200 கட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த கமலநாதனும், அவருடன் வந்த வேலங்குடியை சேர்ந்த மாசிலாமணி (40) என்பவரும் சேர்ந்து, வங்கி மேலாளர் விஜயராகவனை திட்டி தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற புத்தூரை சேர்ந்த அருண் (26) என்பவரை தாக்கினர்.
இதில் காயமடைந்த இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விஜயராகவன் திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலநாதன், மாசிலாமணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Related Tags :
Next Story