புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் தபால் ஊழியர்கள் கோட்ட மாநாட்டில் வலியுறுத்தல்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோவில்பட்டியில் நடந்த தேசிய தபால் ஊழியர்கள் கோட்ட மாநாட்டில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவில்பட்டி,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோவில்பட்டியில் நடந்த தேசிய தபால் ஊழியர்கள் கோட்ட மாநாட்டில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோட்ட மாநாடு
கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் தேசிய தபால் ஊழியர்கள் 30-வது கோட்ட மாநாடு நடந்தது. இதில் தபால் துறையில் ஒரு பிரிவான குரூப்-சி, தபால்காரர்கள், எம்.டி.எஸ்., ஜி.டி.எஸ், ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டுக்கு கோவில்பட்டி கோட்ட தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். முன்னாள் மாநில துணை தலைவர் மாரிமுத்து கொடி ஏற்றினார். கோட்ட துணை செயலாளர் ரெஜினா ஜேக்குலின் வரவேற்றார். நிகழ்ச்சியில், தமிழ்மாநில செயலாளர் குரூப்-சி உதயகுமாரன், புதுவை மாநில செயலாளர் சுகுமாரன், புதுவை தமிழ் மாநில செயலாளர் முனுசாமி, தூத்துக்குடி திருஞானசம்மந்தம், மாநில பொருளாளர் குணசேகரன், தென் மண்டல செயலாளர் ஆறுமுகம், கோவில்பட்டி பாலசுப்பிரமணியன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
கூட்டத்தில், புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். தபால்காரர்களுக்கு வழங்கப்படுகின்றன ஆடை படியான ரூ.5 ஆயிரத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். பணியின் போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
இலாகா ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.24 ஆயிரமாக வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story