இயற்கை பேரிடர் விழிப்புணர்வு பிரசாரம்


இயற்கை பேரிடர் விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 15 Oct 2018 4:00 AM IST (Updated: 15 Oct 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை பஸ் நிலையத்தில் உலக பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி இயற்கை பேரிடர் ஏற்பட்டால் எவ்வாறு தற்காத்து கொள்வது என்று செந்துறை தீயணைப்பு துறையினரால் தற்காப்பு செயல்முறை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

செந்துறை,

செந்துறை பஸ் நிலையத்தில் உலக பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி இயற்கை பேரிடர் ஏற்பட்டால் எவ்வாறு தற்காத்து கொள்வது என்று செந்துறை தீயணைப்பு துறையினரால் தற்காப்பு செயல்முறை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. தாசில்தார் உமாசங்கரி தலைமை தாங்கினார். இதில் மழையின் போது கொதிக்க வைத்த நீரை பருக வேண்டும். வெள்ளநீரில் குளிக்கக்கூடாது. தீ விபத்து, மின்னலின் போது மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். மின்னலின் போது செல்போன் பயன்படுத்த கூடாது. மரத்தின் கீழ் நிற்க கூடாது என தாசில்தார் விளக்கம் அளித்து, அனைவருக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து தீயணைப்பு துறை அலுவலர் செந்தில்குமார் பொதுமக்களிடம் மழை வெள்ளத்தில் இருந்து குடங்களை கொண்டு எப்படி தப்பிப்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை ஈரப்போர்வையால் போர்த்தி அணைக்க வேண்டும். காயம்பட்டவர்களை எவ்வாறு தூக்கிச்செல்வது போன்றவற்றை செயல்முறை விளக்கமாக செய்து காட்டினர். இதில் செந்துறை போலீசார், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா, உதவியாளர் இளவரசன் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story