மலேசியாவில் வேலை பார்த்த வாலிபர் மர்ம சாவு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கலெக்டரிடம் கோரிக்கை
மலேசியாவில் ஓட்டலில் வேலை பார்த்த கறம்பக்குடி வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு, புதுக்கோட்டை கலெக்டருக்கு, வாலிபரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கே.கே.பட்டியை சேர்ந்தவர் சார்லஸ்(வயது 30). இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு சச்சின், அபிஷேக் என்ற மகன்களும், ஜாஸ்மின் என்ற மகளும் உள்ளனர். காதல் திருமணம் செய்துகொண்ட சார்லஸ், குடும்ப வறுமையை போக்குவதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவிற்கு சென்றார். அங்கு ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உமாவிடம் செல்போனில் பேசிய சார்லஸ், கடந்த ஒரு ஆண்டாக தனக்கு சரியாக சம்பளம் தரவில்லை எனவும், இது குறித்து முதலாளியிடம் பேசிவிட்டு தகவல் தெரிவிப்பதாகவும் கூறினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சார்லஸ், அவருடைய அறையில் மர்மமான இறந்து கிடப்பதாக அவருடன் வேலை பார்த்த ஊழியர்கள் உமாவிடம் செல்போனில் தகவல் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உமா, மலேசியாவில் வேலைபார்க்கும் சார்லசின் மற்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சார்லஸ் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை என்று கூறி உள்ளனர். சார்லஸ் இறந்து கிடக்கும் போட்டோவையும் அனுப்பி வைத்தனர். வறுமையில் வாடிய தனது குடும்பத்தை காப்பாற்ற மலேசியா சென்ற சார்லஸ், வெளிநாடு சென்றதற்கான கடனையே அடைக்க முடியாத நிலையில் மர்மமான நிலையில் இறந்திருப்பது அவருடைய குடும்பத்தினரை நிலைகுலைய செய்துள்ளது. இதற்கிடையே மலேசியாவில் இறந்த சார்லசின் உடலை அவருடைய சொந்த ஊருக்கு கொண்டுவரவும், அவருடைய சாவுக்கான காரணத்தை அறியவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சார்லசின் உறவினர்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story