கடற்கரை பூங்கா அமைக்கும் பணி விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கிரண்பெடி உத்தரவு


கடற்கரை பூங்கா அமைக்கும் பணி விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 15 Oct 2018 3:30 AM IST (Updated: 15 Oct 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

அரிக்கன்மேடு, சின்னவீராம்பட்டினம் கடற்கரையில் பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

அரியாங்குப்பம்,

புதுவைக்கு வரும் வெளியூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி சின்னவீராம்பட்டினம், அரிக்கன்மேடு, பூரணாங்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் கடற்கரை பகுதிகளில் பல கோடி ரூபாய் செலவில் விளையாட்டு திடல், உணவகம், நடைபயிற்சி உள்பட பல்வேறு அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படுகிறது.

இந்த பணிகளை விரைவுபடுத்தும் வகையில் கவர்னர் கிரண்பெடி நேற்று காலை ஆய்வு செய்தார்.

அரிக்கன்மேடு மற்றும் சின்னவீராம்பட்டினம் பகுதியில் பூங்கா அமைக்கும் பணிகளை பார்வையிட்ட கவர்னர், இதுவரை முடிந்துள்ள பணிகள், இன்னும் நடைபெற உள்ள பணிகளின் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த பணிகளை விரைவில் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.


Next Story