வேலூர் மாவட்ட ஏரிகளில்: வண்டல் மண் எடுத்து 17,480 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் கலெக்டர் தகவல்


வேலூர் மாவட்ட ஏரிகளில்: வண்டல் மண் எடுத்து 17,480 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2018 9:45 PM GMT (Updated: 14 Oct 2018 9:27 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் 17,480 விவசாயிகள் ஏரிகளில் வண்டல் மண் எடுத்து பயனடைந்துள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் 13 வட்டாரங்களில் 974 ஏரிகளில் 5 ஆயிரத்து 543 விவசாயிகள் வண்டல் மண் எடுத்து பயன்படுத்தியுள்ளனர். அதேபோன்று 2018-ம் ஆண்டு அணைக்கட்டு வட்டத்தில் 559 விவசாயிகளும், காட்பாடி வட்டத்தில் 2 ஆயிரத்து 234 விவசாயிகளும், குடியாத்தம் வட்டத்தில் 920 விவசாயிகளும், பேரணாம்பட்டு வட்டத்தில் 182 விவசாயிகளும் வண்டல் மண் எடுத்து பயன்படுத்தி உள்ளனர்.

ஆற்காடு வட்டத்தில் 436 விவசாயிகள், வாலாஜா வட்டத்தில் 897 விவசாயிகள், நெமிலி வட்டத்தில் 766 விவசாயிகள், அரக்கோணம் வட்டத்தில் 1331 விவசாயிகள், ஆம்பூர் வட்டத்தில் 127 விவசாயிகள், வாணியம்பாடி வட்டத்தில் 467 விவசாயிகள், திருப்பத்தூர் வட்டத்தில் 2 ஆயிரத்து 362 விவசாயிகள், நாட்டறம்பள்ளி வட்டத்தில் 475 விவசாயிகள் உள்பட 11 ஆயிரத்து 937 விவசாயிகள் மண் எடுத்து தங்களின் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தி பயனடைந்துள்ளனர்.

2017-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கோடை காலங்களில் வேலூர் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 480 விவசாயிகள் வண்டல் மண் எடுத்து தங்கள் நிலங்களை வளப்படுத்தி விவசாயம் செய்து பயனடைந்து வருகின்றனர்.

இதுபோன்று விவசாயிகள் மேம்பாட்டிற்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டத்தினை ஆண்டுதோறும் அதிகப்படியான விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story