வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்த நிலையில் பழைய காதலன் மிரட்டியதால் பெண் வக்கீல் தற்கொலை தூக்குப்போட்டு உயிரை மாய்த்து கொண்டார்
மங்களூரு அருகே, வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்த நிலையில் பழைய காதலன் மிரட்டியதால் மனமுடைந்து பெண் வக்கீல் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மங்களூரு,
மங்களூரு அருகே, வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்த நிலையில் பழைய காதலன் மிரட்டியதால் மனமுடைந்து பெண் வக்கீல் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் வக்கீல்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கதிரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அஸ்வினி(வயது 26). வக்கீல். இவருடைய சொந்த ஊர் பெல்தங்கடி தாலுகாவிற்கு உட்பட்ட கானியூர் கிராமம் ஆகும். வேலை காரணமாக இவர் கதிரி பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படு கிறது.
அஸ்வினியின் காதல் விவகாரம், அவருடைய பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அஸ்வினியை கண்டித்தனர். மேலும் அஸ்வினிக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இதையடுத்து அஸ்வினி தனது காதலனை கைவிட்டு, தனக்கு மணமகனாக தேர்வு செய்யப்பட்ட அந்த வாலிபரிடம் பழகி வந்தார். மேலும் அவரிடம் செல்போனிலும் பேசி வந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த விவரம் அஸ்வினியின் பழைய காதலனுக்கு தெரியவந்தது. அவர் இதுபற்றி அஸ்வினியிடம் கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு உண்டானது. அப்போது அஸ்வினியை அவருடைய பழைய காதலன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அஸ்வினி, நேற்று முன்தினம் தான் தங்கியிருந்த வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி கதிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஸ்வினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார் கள்.
Related Tags :
Next Story