கல்வி வழங்குவதில் பாரபட்சம் இருக்கக்கூடாது கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா பேச்சு


கல்வி வழங்குவதில் பாரபட்சம் இருக்கக்கூடாது கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 15 Oct 2018 4:00 AM IST (Updated: 15 Oct 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

கல்வி வழங்குவதில் பாரபட்சம் இருக்கக்கூடாது என்று கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா கூறினார்.

பெங்களூரு, 

கல்வி வழங்குவதில் பாரபட்சம் இருக்கக்கூடாது என்று கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா கூறினார்.

அபராதம் விதிக்கும் நிலை

புத்தர், பசவ, காந்தி கலாசார அறக்கட்டளை சார்பில் கன்னட கலாசார மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தனியார் பள்ளிகளில் கன்னடம் பேசினால் அபராதம் விதிக்கும் நிலை உள்ளது. இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் அறிவாளிகள் ஆக முடியாது. இத்தகைய கல்வி, கல் குன்றில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதை போன்றது ஆகும். மொழி எப்போதும், பூமி-நிலத்தை போல் இருக்க வேண்டுமே தவிர, கல்லாக இருக்கக்கூடாது.

சமச்சீராக வழங்க வேண்டும்

வங்கி, ரெயில்வே வேலைக்கான தேர்வு ஆங்கிலம், இந்தி மொழியில் இருக்கிறது. இது மாணவர்களுக்கு கடினமாக உள்ளது. அதனால் போட்டி தேர்வுகளை மாநில மொழியிலேயே நடத்த வேண்டும். 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கன்னட வழியில் கல்வியை கற்பிக்க வேண்டும். கல்வியை இலவசமாக, சமச்சீராக வழங்க வேண்டும்.

வசதி படைத்தவர்களுக்கு ஒரு கல்வி, ஏழைகளுக்கு ஒரு கல்வி வழங்கும் நிலை தற்போது உள்ளது. கல்வியை வழங்குவதில் பாரபட்சம் இருக்கக்கூடாது. அனைவருக்கும் ஒரே சீரான கல்வியை வழங்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எஸ்.ஜி.சித்த ராமையா பேசினார்.

Next Story