பிரபல இந்தி பட தயாரிப்பாளர் சுபாஷ் கய் மீது மாடல் அழகி மானபங்க புகார் போலீஸ் விசாரணை
இந்தி பட தயாரிப்பாளர் சுபாஷ் கய் மீது மாடல் அழகி ஒருவர் மானபங்க புகார் கொடுத்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
இந்தி பட தயாரிப்பாளர் சுபாஷ் கய் மீது மாடல் அழகி ஒருவர் மானபங்க புகார் கொடுத்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானபங்க புகார்
மும்பையை சேர்ந்த பிரபல இந்தி பட தயாரிப்பாளர் சுபாஷ் கய். 73 வயதான இவர் மீது மாடல் அழகி ஒருவர் வெர்சோவா போலீசில் மானபங்க புகார் அளித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பட தயாரிப்பாளர் சுபாஷ் கயை எனக்கு 5 மாதங்களாக தெரியும். அவர் எனக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக தெரிவித்து இருந்தார். மேலும் அழைப்பின் பேரில் அவரது வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்போது சென்று வந்து இருக்கிறேன்.
கடந்த ஆகஸ்டு 6-ந் தேதி என்னை அவரது வீட்டுக்கு வரும்படி கூறினார். அதன்பேரில் நான் அங்கு சென்றேன். அப்போது, என்னை அவருக்கு மசாஜ் செய்து விடும்படி கூறினார்.
இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் வயதில் மூத்தவர் என்பதால் அவருக்கு நான் மசாஜ் செய்து விட்டேன். பின்னர் கையை கழுவுவதற்காக சென்றபோது, அவர் என்னை பின் தொடர்ந்து வந்தார். தனியாக பேச வேண்டும் என ஒரு அறைக்கு அழைத்து சென்றார்.
போலீஸ் விசாரணை
அங்கு வைத்து திடீரென அவர் என் கையை பிடித்து இழுத்து முத்தமிட முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத நான் அவரை கண்டித்தேன். உடனே அங்கிருந்து செல்கிறேன் என்றேன். ஆனால் அவர் அந்த இரவை தன்னுடன் கழிக்க வேண்டும் என்று கூறினார். இல்லையெனில் படவாய்ப்பு தர மாட்டேன் எனவும் சினிமா நட்சத்திரமாக முடியாது என்றும் மிரட்டினார்.
இவ்வாறு அந்த புகாரில் அவர் தெரிவித்து உள்ளார்.
மாடல் அழகியின் இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், தன் மீதான மானபங்க புகாரை பட தயாரிப்பாளர் சுபாஷ் கய் மறுத்து உள்ளார். பிரபலமானவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வரும் நாகரிகம் பெருகி வருவது வருத்தத்திற்குரியது என்றார்.
Related Tags :
Next Story