குறி தவறியதால் உயிர் தப்பினார் மனைவியை துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை வீரர் கைது

குறி தவறியதால் உயிர் தப்பினார் மனைவியை துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை வீரர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2018 11:30 PM GMT (Updated: 14 Oct 2018 11:30 PM GMT)

மனைவியை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். குறி தப்பியதால் அவரது மனைவி உயிர் தப்பினார்.

புனே, 

மனைவியை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். குறி தப்பியதால் அவரது மனைவி உயிர் தப்பினார்.

துப்பாக்கியால் சுட்டார்

புனே தாடிவாலா ரோட்டில் வசித்து வருபவர் பாலாஜி (வயது46). ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர். இவரது மனைவி கதுபாய். இவர்களுக்கு யோகேஷ் (24) என்ற மகன் உள்ளார்.

இந்தநிலையில், சம்பவத்தன்று பாலாஜி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மனைவி கதுபாய், மது குடித்துவிட்டு வீட்டிற்கு வர கூடாது என கணவரை கண்டித்து உள்ளார். மேலும் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் துப்பாக்கியை எடுத்து மனைவியை நோக்கி சுட்டார். ஆனால் குறி தவறியதால் குண்டு வேறு இடத்தில் விழுந்தது. இதனால் அவரது மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து சத்தம் கேட்டு அவரது மகன் யோகேஷ் அங்கு வந்தார். அவர் உடனே தந்தையை தடுத்து நிறுத்திவிட்டு தாயை மீட்டார்.

கைது

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து யோகேஷ் பந்த் கார்டன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரரை கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story