மாநகராட்சி பொது கழிவறையில் தண்ணீர் தொட்டி உடைந்து விழுந்து முதியவர் சாவு
வளசரவாக்கத்தில், மாநகராட்சி பொது கழிவறையில் தண்ணீர் தொட்டி உடைந்து விழுந்ததில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
பூந்தமல்லி,
வளசரவாக்கம், ராமாபுரம், பாரதி சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது கழிவறை உள்ளது.
நேற்று இந்த கழிவறையின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டி உடைந்து கழிவறைக்குள் விழுந்து கிடந்தது.
அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த ஊழியர்கள் உடைந்த தண்ணீர் தொட்டியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கழிவறையில் இடிபாடுகளுக்குள் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக ராயலா நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக் கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து விசாரித்தனர்.
அதில், இறந்துபோன முதியவர் ராமாபுரம், காந்தி நகரை சேர்ந்த ராமலிங்கம் (வயது 65) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-
ராமலிங்கம், தினமும் காலையில் இந்த கழிவறைக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த கழிவறை முறையான பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் யாரும் பயன்படுத்தாமல் இருந்து வந்துள்ளனர். எனினும் ராமலிங்கம் மட்டும் இந்த கழிவறையை தினமும் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை ராமலிங்கம் கழிவறைக்கு வந்தார். கழிவறைக்குள் இருந்த போது, மேலே இருந்த தண்ணீர் தொட்டி திடீரென உடைந்து விழுந்ததில் ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரிய வந்திருக்கிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து ராயலா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கழிவறையை முறையாக பராமரிக்காததே முதியவரின் உயிர் இழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

Related Tags :
Next Story