கலெக்டர் அலுவலகம் முன்பு அவல் தயாரித்து விவசாயிகள் நூதன போராட்டம் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்


கலெக்டர் அலுவலகம் முன்பு அவல் தயாரித்து விவசாயிகள் நூதன போராட்டம் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Oct 2018 11:00 PM GMT (Updated: 15 Oct 2018 7:16 PM GMT)

நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு அவல் தயாரித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.

இதில் விவசாய சங்கங் களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன் தலைமையிலான விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

டெல்டா மாவட்டத்தில் முன்பட்ட குறுவை நடவுக்கு மானியம் தொகுப்புத்திட்டம் அறிவித்தும் விவசாயிகளுக்கு தொகுப்பு மானியம் சேரவில்லை. குறுவை பட்டம் அறுவடை செய்யும் பட்சத்தில் நெல் கொள்முதல் செய்யவில்லை. சாக்குப்பைகள் இல்லை என்று சொல்லி தட்டிக்கழிக்கிறார்கள். இந்தநிலையில் தயார் நிலையில் உள்ள குறுவை நெல் ரோட்டிலும், களத்திலும் மூடிக்கிடக்கிறது. அவை மழையில் நனைந்து முளைத்துக்கிடக்கிறது. அவியலுக்கும் போட முடியாமல் அவல் இடிக்கும் தருவாயில் உள்ள நெல்லை விவசாயிகள் உலக்கை வைத்து அவல் இடிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே விவசாயிகளின் அவல நிலையை போக்கி அவர்கள் விளைவித்த நெல்லை உடனே கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலு வலகம் முன்பு விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை உரலில் போட்டு அவல் தயாரிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர் சக்திவேல், ஒன்றிய தலைவர்கள் செல்லதுரை, ஜெய்குமார், செயலாளர்கள் ராமநாதன், சதாசிவம், தாமோதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story