மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க தனி குவாரி கலெக்டரிடம், தொழிற் சங்கத்தினர் கோரிக்கை
மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க தனி குவாரி அமைத்து தரவேண்டும் என்று இந்திய தொழிற் சங்க மையம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையை, சி.ஐ.டி.யூ. தொழிற் சங்க மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் அன்பு, முறை சாரா சங்க மாவட்ட செயலாளர் பேர்நிதிஆழ்வார், தரைக்கடை சங்க மாவட்ட தலைவர் மணிமாறன், செயலாளர் மில்லர்பிரபு, மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் செந்தில், சேட்டு, திருநாவுக்கரசு, முருகேசன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:--
பாபநாசம், திருவையாறு மற்றும் கும்பகோணம் தாலுகாவில் மாட்டு வண்டியில் மணல் எடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது கொள்ளிடம் ஆற்றில் நீலத்தநல்லூரில் இயங்கி வந்த மணல் குவாரி மூடப்பட்டதால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் எடுக்க முடியாமல் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மாட்டு வண்டியில் மணல் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கொள்ளிடம் ஆற்றில் திருப்புறம்பியம், அரையத்தமேடு, வாழ்க்கை, தேவன்குடி ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க தனி குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story